எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் 5 மற்றும் 10 ஆம் திகதிக்குள் கலைக்கப்படும் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் திகதியை ஜனவரி 5ம் திகதிக்கு முன்னதாக அறிவிப்போம் என தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.