பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறி கோரக்கோவில், ஜே புளக், உதயபுரம் மற்றும் தமிழ்ப்பிரிவு – 4 ஆகிய கிராமங்களில் உள்ள 100 பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவரும் இளம் விஞ்ஞானியுமான சோ.வினோஜ்குமார் தலைமையில் சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தலைவரும் அதிபருமான சோ.இளங்கோவன் அவர்களும், ஆலய பரிபாலன சபை தலைவர் பாலசுப்பிரமணியம் அவர்களும், உபதலைவர் வே. மோகன் அவர்களும், செயலாளர் அழகுராஜா அவர்களும், பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய தலைவர் சோ.தினேஸ்குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

மக்களுக்கு யோகாக் கலையின் உண்மைகளை உணர்த்த சைவ முன்னேற்றச் சங்கத்தின் மற்றுமொரு சேவையே அறிவொளி வளையம் என்பது குறிப்பிடத்தக்கது.