வெற்றி நடைபோடும் கனடா தமிழ் இளையோரின் “அடியே கோவக்காரி”

கே.எஸ்.கிலசன்

கனடா தமிழ் பசங்க தயாரிப்பில் ஆதிஷ் AK இசையில் வெளிவந்துள்ள “அடியே கோவக்காரி” பாடல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

வீணா AE இயக்கியுள்ள இந்த காணொளிப் பாடலின் வரிகளை ரகு பிரணவன் மற்றும் வீணா AE ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப்பாடலை ரகு பிரணவன், வீணா AE உடன் இசையமைப்பாளர் ஆதிஷ் AKம் இணைந்து பாடியுள்ளார்.

பாடலின் அட்டகாசமாக நடனத்தையும் பிரவீணா டான்ஸ் அகடமியைச் சேர்ந்த நடனக் கலைஞர்களை வைத்து இயக்குனர் வீணா அவர்களே அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை சாம் டில் ருக்ஷானும் கலை இயக்கத்தை மொஷிகரனும் சிறப்பாக செய்துள்ளனர்.