படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22 வது நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது!

(கனகராசா சரவணன்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபில் இன்று புதன்கிழமை (19) ஊடகவியலாளர்கள் மற்றம் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர் .

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் பா.கிருஷ;ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன். மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவான்,மட்டக்களப்பு சர்வமத நல்லினக்கத்தின் செயலாளர்  வணபிதா ஜேசுதாஸ்., மற்றும் மனித நேய அமைப்புக்ளைச் சோந்தவர்கள் கலந்து கொண்டு  

படுகொலை செய்யப்பட்ட ம.நிமலராஜன் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்