அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறும்.

தரம் 5 புலமை பரிசில் மற்றும் கல்வி பொது தராதர பத்திர சாதானத்தர பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில் இடம் பெற உள்ளன.

இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி ஆரம்பமாவதுடன் 2023 மார்ச் 21 ஆம் திகதியுடன் 2022 கல்வியாண்டு நிறைவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You missed