கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை – முன்னாள் எம்பி ஸ்ரீ நேசன்

கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு இலங்கையில் மாகாண சபை முறைமை அறிமுகமானது.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கல் செய்த வழக்கின் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வட கிழக்கு இரண்டு மாகாண சபைகளாக பிரிக்கப்பட்டன.

2008 ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாண சபை தனியாக இயங்கி வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 39 வீதத்துக்கும் அதிகமாக வாழ்கின்றார்கள், முஸ்லிம்கள் 37 வீதமாக உள்ளார்கள், சிங்களவர்கள் 23 வீதமாக உள்ளார்கள்.

கிழக்கு மாகாண சபை தனியாக பிரிக்கப்பட்டு இதுவரை தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை.
இதுவரை கிழக்கு ஆளுநராக இரண்டு முஸ்லிம்களும், ஐந்து சிங்களவர்களும், இருந்துள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் தெரிவித்தார்.