கோட்டா சிங்கப்பூரில் இருந்து எங்கு பறக்கிறார்?

இலங்கையின் பொருளாதார நெருக்கடியையடுத்து மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பி ஓடி இருந்தார். இவர் அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பித்த போதும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அடுத்து மாலைதீவுக்கு பறந்து அங்கிருந்து சிங்கப்பூர் சென்று இருந்தார். அங்கிருந்து தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

சிங்கப்பூரிலும் நீண்ட நாட்கள் வசிப்பதற்குரிய அனுமதிகள் கிடைக்காத நிலையில் தற்காலிகமாக தக்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்ல இருப்பதாக சர்வதேச செய்தி சேவையொன்று தெரிவித்துள்ளது.

சில காலம் அவர் அங்கு தங்கியிருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.