கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா நேற்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 

கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு (திருமதி) எஸ்.சரணியா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் உதவிப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You missed