சுமந்திரனும் சாணக்கியனும் சீன தூதுவரை இரகசியமாக சந்தித்தார்களா? வெளியாகும் மற்றுமொரு சர்ச்சை

ஜனாதிபதி தேர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது தொடர்பாக கூடிய கூட்டம், தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு ஊடகங்களிலும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் வட்டாரங்களிலும் தொடர்ச்சியாக பேசு பொருளாக இருந்த வருகின்றது.

இன்றைய தினம் லங்கா ஸ்ரீ தமிழ்வின் ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் வெளியான செய்தியை இங்கு தருகிறோம்

நன்றி -தமிழ்வின்

ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை ராஜதந்திர ரீதியில் இந்திய தரப்பினரிடம் மாத்திரமின்றி சர்வதேச நாடுகளிலும் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை,தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரடியாக ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில்,இந்த சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பிற்கு முன்னர் சுமந்திரன்,சாணக்கியன் சீன தூதரை இரசியமாக சந்தித்துள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை களப்பியுள்ளதுடன்,இது தொடர்பிலான ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

You missed