பாண்டிருப்பு கடற்கரையில் ஒரு நண்பர் குழாமின் வரவேற்கத்தக்க செயற்பாடு!

பாண்டிருப்பு கடற்கரையில் ஒரு நண்பர்கள் குழாம் இணைந்து முன்மாதிரியான செயற்பாடு ஒன்றை செய்துள்ளார்கள்.

பாண்டிருப்பு கடற்கரை சூழலை சுத்தம் செய்து அந்த இடங்களில் பயன் தரும் மரங்களை நட்டு, அதற்கான பாதுகாப்பு வேலிகளையும் அமைத்து, மரங்களுக்கு நீர் பாச்சம் நீர் இணைப்புகளையும் ஏற்படுத்தி மரங்களை பராமரித்து வருகின்றார்கள்.

இந்த செயற்பாட்டை முன்னெடுத்த இவர்கள், தினமும் கடல் தொழிலுக்காகவும், பொழுது போக்குக்காகவும் அதிக நேரங்களை கடற்கரையில் செலவழிப்பவர்கள். இவ்வாறு வெறுமனே தங்களுடைய வேலைகளோடு மாத்திரம் நின்று விடாது சுயமாக இவர்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் நிதி சேகரித்து கடற்கரையை அழகு படுத்தும் நோக்கோடு மரங்களை நட்டு பராமரித்து வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.