( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மேசைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

 கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் கடந்த  12ம் மற்றும் 13ம் திகதிகளில் இடம் பெற்றது. 

இப்போட்டியில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய  20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாகாணமட்ட போட்டியில் கிழக்கு மாகாணத்தில் பிரபல்யமான பாடசாலைகளோடு போட்டியிட்டு சிறந்த முறையில் விளையாடி மாகாண மட்டத்தில் 1st Runner up  இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

வெற்றி பெற்ற வீராங்கனைகள்,பாடசாலை அதிபர் சோமசுந்தரம் இளங்கோபன், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கேஎல்.மொகமட் ஷக்கி  உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் , வலயக் கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் வி.மோகன் உள்ளிட்ட பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும், தெரிவித்து வருகின்றது.

மாகாண மட்ட பெரு விளையாட்டு போட்டி ஒன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டம் செல்வது இந்த பாடசாலை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை கோரக்கர் மண்ணுக்கும்,  பாடசாலைக்கும்  பெருமை தேடித்தந்து  தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.