வடிவேல் டினேஸ்

எதிர்வரும் 10 ஆம் திகதி உகந்தை காட்டுப் பாதை ஊடாக கதிர்காமம் ஆலயம் நோக்கி பாதயாத்திரை மேற் கொள்ளும் அடியவர்கள் தற்போது தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த மே மாதம் யாழ் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ப்தயாத்திரை மேற் கொண்ட குழுவினர் தற்போது அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாதயாத்திரை அடியார்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் தற்போது அம்பாறை மாவட்டம் பொத்துவில் குண்டுமடு முருகன் ஆலயத்தில் தங்கியுள்ளனர்.

இன்றைய தினம் (04) அக்கரைப்பற்று CDFF கிளையினால் ஒரு தொகை மருந்து பொருட்கள் பாதயாத்திரை மேற் கொள்ளும் அடியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது அக்கரைப்பற்று CDFF கிளை முகாமையாளர் வடிவேல் டினேஸ் மற்றும் நிர்வாக , சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.