செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பக்திப் பாடல்களின் தொகுப்பான ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு, நாளை (03.07.2026) வெளியிடப்படவுள்ளது.

இந்த வெளியீட்டு நிகழ்வு, நாவிதன்வெளி கற்பக விநாயகர் ஆலயத்தில் நண்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஆலய தர்மகர்த்தா சிவஸ்ரீ கண. மாதவராஜா, பாட்லாசிரியர் விவேகவெளி தமிழேந்திரன் எனும் புனைப்பெயரை உடைய ச. நவவேந்திரன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த இசைத்தட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து பக்திப் பாடல்களும் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். பக்தியும் நவீன தொழில்நுட்பமும் இணையும் புதிய முயற்சியாக உருவாகியுள்ள இந்த இசைத்தட்டு, ஆன்மீக அன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“விநாயகர் போற்றி! கற்பக விநாயகர் போற்றி!!”

இந்த சிறப்பு நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.