செல்லையா பேரின்பராசா  .

உரும்பிராயை சேர்ந்தவரும் லண்டனில் வாழ்பவருமாகிய பொறியியலாளர் எம் ரி. செல்வராஜா எழுதிய செம்பாட்டுச் சீமை என்ற உரும்பிராய் கிராமத்தின் சரித நூலின் வெளியீட்டு விழா 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம் தொடக்க உரை ஆற்றி நூலை வெளியிட்டு வைத்தார் . 

நூலின் வெளியிட்டுரையை பிரதி கல்வி பணிப்பாளர் பஞ்சாட்சரம் கணேசனும் ஆய்வுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரை மனோகரனும் ஆற்றினர் 

நிகழ்வில் ஆசியுரைகளை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் சுன்னாகம் பங்குத்தந்தை அருட்பணி மைக்கல் முத்து நிக்சன் கொலின் அடிகளார் ஆகியோர் ஆற்றினர்.

உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் ம.  வினோகாந்த் வரவேற்புரையாற்றினார். முன்னாள் கோட்ட கல்வி பணிப்பாளர் அ. ஈஸ்வரநாதன் ஞான வெளிச்சம் வொட்சிகன் அருட்பணி இம்மானுவேல் டேவிட் இணுவில் ந. சச்சிதானந்தம் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். 

உரும்பிராய் மண்ணில் சேவையாற்றிய சென் ஜோன்ஸ் கல்லூரி முன்னாள் ஆசிரியர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டனர்.

600 இற்கு மேற்பட்ட பக்கங்களுடன் வண்ணப் படங்களுடன் இந் நூல் வெளிவந்துள்ளது