“ஒன்றிணைந்து சேவை செய்வோம், ஒன்றிணைந்து வளர்வோம்”
என்ற தொனிப்பொருளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்வானது, இயற்கை அன்னையின் ஆசிர்வாத மழையின் மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது (23) கனடா மிசிசாகா புறோக்மிட் பார்க்கில் நடைபெற்ற போது, வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்கு பற்றி இந்நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
வருகை தந்தவர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் நன்றி கூறப்பட்டதுடன், மர நடுகையின் முக்கியத்துவமும் விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகை தந்த அனைவருக்கும் மரநடுகைக்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

