அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் கல்விப் பணிப்பாளராக, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்த விசேட நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது.
இதனையடுத்து, முறையான நேர்முகப் பரீட்சையின் மூலம் புதிய பணிப்பாளர் ஒருவர் நிரந்தரமாக நியமிக்கப்படும் வரை, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இந்த புதிய பொறுப்பும் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

