பாறுக் ஷிஹான்
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று திங்கட்கிழமை (18) அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்நாயக்க, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி,அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
பின்னர், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டியும், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும் இந்நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.





