( வி.ரி.சகாதேவராஜா)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கோமாரி மயானத்தில் பாரிய சிரமதானப் பணிகள் நேற்று (18) திங்கள் கிழமை முன்னெடுக்கப்பட்டன.
பொத்துவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில்,கோமாரி பிரதேச உறுப்பினர் த. சுபோதரனின் வேண்டுகோளுக்கிணங்க தவிசாளர் முஷரப்பின் வழிகாட்டுதலில் இந்த சிரமதானம் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கனரக வாகன உதவியுடன் கோமாரி மயானப் பகுதியை சுத்தம் செய்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.
சிரமதான பணிகளை மேலதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர்.
சுற்றுச்சூழல் சுத்தத்தையும் நினைவேந்தல் தினத்தின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சிரமதானப் பணிக்கு பொதுமக்களிடமிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.





