தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக பிரதிநிதிகள் இன்று மாலை முதலமைச்சர் விஜய்யை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


இந்த நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான சில எம்.எல்.ஏ.க்கள் தனியாக ஆலோசனைகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 28 முதல் 37 வரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

இன்று இரவு தனியார் மண்டபம் ஒன்றில் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய கூட்டணி மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Maalai Malar