செல்லையா பேரின்பராசா 

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் 29.03.2026 இடம்பெற்றது. 

 மட்டக்களப்பு  மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்மடு கிராம அதிகாரி பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு கிராம அதிகாரி அலுவலகத்தில்   இடம் பெற்றது. 

இருநூற்று ஐம்பது ( 250 ) குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை மூலம்   யாழ்ப்பாணம் புங்குடுதீவு  எட்டாம் (08) ஆம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் கதிர்காமர் வேலாயுதபிள்ளை அவர்களின் 35 ஆவது வருட நினைவு தினத்தையும், அமரர் திருமதி. வேலாயுதபிள்ளை செல்லம்மா அவர்களின் 31வது வருட நினைவு தினத்தையும் முன்னிட்டு இவர்களின்   புதல்வன்  ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் மூலம் 250 குடும்பங்களுக்கு இரண்டாயிரம்  ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி  வழங்கப்பட்டது. 

குறித்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரவை உறுப்பினர்களான  சா.லோகநாதன், எஸ்.கிருபா எஸ்.இனோஐன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.