ஆறு வருட அரச சித்த வைத்திய பட்ட படிப்பை நிறைவு செய்து,
இதுவரை அரசினால் எந்த அனுசரணையும் இன்றி மனவேதனையுடன் இருக்கும்,
அரச வேலையை எதிர்பார்த்திருக்கும் சித்த மருத்துவ சங்கத்தினர், தன்னலம் பாராது நாட்டின் நன்மை கருதி,
இன்று காலை (13) ஜனாதிபதி நிதியத்திற்கு சென்று நாட்டை மீள நிர்மாணிக்க சேகரிக்கப்பட்ட உதவி நிதியை வழங்கியனர்.

அத்துடன் நீதி, பாதுகாப்பு, சுற்றுலா, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகள் மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து தங்களின் நிலை பற்றி கலந்துரையாடியதுடன்,  நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஒத்துழைப்பை தெரிவித்துள்ளனர்.