ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது.

செல்லையா-பேரின்பராசா .

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது அரச விருது விழாவில் மட்டக்களப்பு பெரியகல்லாற்றைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும்,  சிரேஸ்ட ஊடகவியலாளருமான வீ.கே.ரவீந்திரன் ( ரவிப்பிரியா)  அரச உயர் விருதான கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அறுபத்து ஐந்து ( 65 ) வருட காலமாக சிறுகதை,  நாவல்,  நாடகம்,  நிகழ்ச்சித் தொகுப்பு போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டிவரும் இவர் மூன்று நாவல்களையும்,  ஒரு சிறுகதை தொகுதியையும் வெளியிட்டதுடன், இலங்கை வானொலியில் தொடர் நாடகத்தை  (25 வாரங்கள்) ஒலிபரப்பாக எழுதியுள்ளார்.

கல்லாறு  ” றோசாலயா ” அமைப்பின் நிறுவுனரான இவர் இவ் அமைப்பினூடாக கல்வி,  சமூக மேம்பாடு,  கலை கலாசார பணிகளை அரை நூற்றாண்டு காலமாக முன்னெடுத்துவரும் சமூக செயற்பாட்டாளர்.

மேலும் வீரகேசரி,  தினகரன் மற்றும் இணையத்தளங்களில் பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றும் இவர் முன்னணி கூட்டுறவாளருமாவார்.