இ.பெ.கூ பாரிய நிதி இழப்பு: முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய இலஞ்ச ஆணைக்குழு முடிவு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (இ.பெ.கூ) ஏற்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் நிதி இழப்பு தொடர்பிலான விசாரணையில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (Bribery Commission) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இந்தத் திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரர் கைது, பிணையில் விடுதலை
இதே விசாரணையின் கீழ், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரரும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான தம்மிக்க ரணதுங்க, இன்று முன்னதாகக் கைது செய்யப்பட்டார்.
எனினும், இவர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாரிய நிதி இழப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சரைக் கைது செய்ய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எடுத்த இந்த முடிவு, அரசு நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்குகள் மீண்டும் சூடுபிடிப்பதைக் காட்டுகிறது.
thanks ARV LOSHAN NEWS
