சமூக செயற்பாட்டாளரும், யோகசன ஆசானும், ஓய்வுநிலை அதிபருமான யோகா ஆச்சாரியார் ,கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில் ‘ தேச அபிமானி விஷ்வகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா தலைமையில் இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது . பதின்மருக்கு கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

யோகா ஆச்சாரியார், யோகா இரத்தினம்,யோகாசன கலாநிதி, கலாபூஷணம், மாகாண மட்டத்தில் பல்துறை வித்தகர்,அணையா விளக்கு யோகவுக்கான விருது . சிறந்த சமூக சேவையாளர் விருது,சமூக சேவை திணைக்களம், தந்தை செல்வா விருது கொழும்பு தந்தை செல்வா மன்றம் என பல அமைப்புக்கள் ஊடக பல விருதுகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.