கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலை விழா நிகழ்வுகள் இன்று (05) கல்முனை தமிழர் கலாசார வளாகத்தில் இடம்பெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகளுடன் அதிதிகள் சிலரும் கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாதம் தோறும் இடம்பெறுகின்ற பௌர்ணமி கலை விழாவின் இம்மாத நிகழ்வுக்கு கல்முனை ராவணா மற்றும் ரோயல் விளையாட்டு கழகங்கள் ஒத்துழைப்பு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி தொகுப்பு கிலசன் மற்றும் பவதாகர்





















































