சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தில் பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல் !
( காரைதீவு சகா)
சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தையொட்டி கல்முனை நெற் ஊடக இணையதளம், பிராந்தியத்தில் புகழ்பெற்ற மூன்று பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடலை நடாத்தியது.
“ஆளுமைகளின் அரங்கம்” நிகழ்வின் ஒரு தொடராக இக் கலந்துரையாடல் கல்முனை நெற் ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (15) புதன்கிழமை மாலை நடைபெற்றது.
கல்முனை நெற் இணையதளத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா நேர்காணலை மேற்கொண்டார்.
பிரபல கவிதாயினிகளான ஓய்வு நிலை ஆசிரியை தம்பிலுவில் ஜெகா, சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய அதிபர் நஸ்லின் றிப்கா அன்சார்,
கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தில் பெண்களுக்கு சமூக நீதியை வழங்குதல் அத்துடன் கிராமிய பெண்களை பல துறைகளிலும் வலுவூட்டல் என்ற தொனிப் பொருளில் அந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதற்கு மேலாக அவர்களது இலக்கிய வாழ்வியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கல்முனை நெற் ஸ்தாபகர் பு.கேதீஸ் நேர்காணலை நெறிப்படுத்தி தயாரித்தார்.
அரங்க வடிவமைப்பை இயக்குனர் சபை உறுப்பினர்களான பி. சந்திரமோகன், கே. சாந்தகுமார், என். அருளானந்தம், பி.புவிராஜா ஆகியோரும், படப்பிடிப்பை ந.சௌமியதாசன், மா.நிதுர்ஷன், பவி மோகன் ஆகியோரும் நிகழ்த்தினர்.