(வி.ரி.சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயத்தில் 2024 இல் நடைபெற்ற கபொத உயர்தரப்பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற 28 மாணவர்களையும், கபொத. சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற 33 மாணவர்களையும் பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்(10) சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் சாதனை மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் தலைமையில் சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில்,  இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து சிறப்பித்தார் .

ஏனைய அதிதிகளாக  கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட சம்மாந்துறை, நாவிதன்வெளி இறக்காமம் கோட்ட பிரதேச  பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.