( வி.ரி. சகாதேவராஜா)
பொத்துவில் கோமாரி, செல்வபுரம் கிராமத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உதவி செய்துள்ளனர்.
இதன் அங்குரார்ப்பணவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித் ,
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனரத் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வு நிலை ஊழியர்களின் நிதியினூடாக அமைக்கப்பட்ட 5000L சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் தொகுதி மக்கள் பாவனைக்காக நேற்று முன்தினம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட தேசிய ம்ம்க்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



