மூன்றவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கி முன்மாதிரியாக செயற்பட்ட நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்! அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாக உறுதி.
தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கே கையளித்தார் நாவிதன்வெளி பிரதேச சபையின் கெளரவ உபதவிசாளர் புவனரூபன்..
…………………………………………………..
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் கெளரவ உபதவிசாளர் கு.புவனரூபன் தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவை
தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த வேப்பயடி கலைமகள் பாடசாலையின்
7 மாணவிகளுக்கும்
15ம் கிராமம் விவேகானந்தா பாடசாலையின்
4 மாணவிகளுக்கும் அப்பியாச கொப்பிகளை வழங்கி மாணவர்களை கெளரவித்து வைத்தார். இந்நிகழ்வு 2025/09/21 திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில்
கண்ணதாசன் ஆசிரியர், சமூக சேவையாளர்
திருச்செல்வம், மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும்
யாழ் பல்கலைக்கழகம்
செல்வன் பிதுர்சன் கிழக்கு பல்கலைக்கழகம்
செல்வன் தனுசாந்த் கிழக்குபல்கலைக்கழகம்
செல்வன் சுகிர்தன்
யாழ் பல்கலைக்கழகம் சஜானன் கிழக்கு பல்கலைக்கழகம் செல்வி நிதுஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தியதோடு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.. அத்தோடு உபதவிசாளரின் சேவை மனப்பாங்கினையும் வாழ்த்தினர்..
கெளரவ பிரதேச சபை உபதவிசாளருக்கு வழங்கப்படும் தனது மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாகவும் மேலும் எதிர்காலத்தில் தனது மாதகொடுப்பனவை உதவியற்ற குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குவதாகவும் உபதவிசாளர் கு.புவனரூபன் தெரிவித்தார்.













