இன்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நவராத்திரி விழா காரைதீவில் ஆரம்பம் 

( வி.ரி.சகாதேவராஜா)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமனறமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா இன்று (22) திங்கட்கிழமை காரைதீவில் ஆரம்பமாகிறது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனனின்  வழிகாட்டலுக்கமைவாக  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் அவதரித்த  இல்லத்தில்  இடம்பெறும் ஏற்பாடுகளை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி  மேற்கொண்டுள்ளார்.

இன்றிலிருந்து ஒன்பது நாட்களும் நாளாந்தம் ஓங்காரம் பஜனைஅஸ்ரோத்திரம் சகலகலாவல்லி மாலை சக்தி பாடல்கள் பூசைஅறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகள் இடம்பெறும்.