நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்; கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த அலுவலக உத்தியோகத்தர்கள்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டம் – நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமை ஆற்றிய பேகராசா பிரணவரூபன், காரைதீவு பிரதேச சேலத்திற்கு இடமாற்றம் பெற்று செல்வதை முன்னிட்டு உதவி பிரதேச செயலாளரின் சேவையை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு   (02)  மாலை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் அலுவலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலகத்தின் ஒவ்வொரு பிரிவுகள் சார்பிலும் உதவி பிரதேச செயலாளர் பிரணவரூபன் பற்றிய பல்வேறு குறிப்புகள், உரைகள் இடம்பெற்றதுடன் இறுதியில் தனது ஏற்புரையை நிகழ்த்தினார்.

தனது ஏற்புரையின் போது, நாவின்வெளி அலுவலகத்தில் இருந்து பிரிந்து செல்வதை தாங்க முடியாமல் கண்ணீர் மல்க உரை நிகழ்தியதை கேட்டுக் கொண்டிருந்த பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கண்ணீர் சிந்தியதை காணக்கூடியதாக இருந்தது.

நிகழ்வின்போது, பிரதேச செயலகத்தின் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு பொன்னாடைகள், வாழ்ந்து பாக்கள், நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டி கெளரவித்தனர்.

உதவி பிரதேச செயலாளர் பேகராசா பிரணவரூபன் 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் திகதி முதல் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையை பொறுப்பேற்று சுமார் நான்கு வருடங்கள் கடமை ஆற்றிய நிலையில் தற்போது காரைதீவு பிரதேச சேலத்திற்கு இடமாற்றம் பெற்று செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.