களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ;நன்கொடை மார்க்கண்டு நேசராசா ( MP இஷானி பிரைவேட் லிமிடெட் UK)
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ஒன்று மார்க்கண்டு நேசராசா ( MP இஷானி பிரைவேட் லிமிடெட் UK) அவர்களால் (Heavy Industrial Washing Machine) நன்கொடையாக (17-07-2025) வழங்கி வைக்கப்பட்டது.
Friends of Batticaloa Hospitals Charity அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஐக்கிய இராச்சியத்தில் வசிப்பவரும், கோவில் போரதீவினைப் பூர்வீகமாகவும் கொண்ட திரு.மார்க்கண்டு- நேசராசா அவர்களின் நிதி பங்களிப்பில் சுமார் ரூ. 8.5 மில்லியன் செலவில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்ட, புதிய 35kg கொள்ளளவுடைய கனரக தொழில்துறை சலவை இயந்திரத்தினை (Heavy Industrial Washing Machine) பாவனைக்காக வழங்கி வைக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வானது, வைத்திய அத்தியட்சகர் Dr.K.புவனேந்திரநாதன் அவர்களின் தலைமையில் (17.07.2025)ஆம் திகதி இடம்பெற்றது.
வைத்தியசாலையின் சலவைத் தேவை நாளொன்றுக்கு சுமார் 50kg ற்கும் அதிகம் என்பதுடன், அவர்களின் தேவையாக இருந்த இரண்டு கனரக தொழிற்துறை சலவை இயந்திரங்களும் இயங்கு நிலையில் இல்லாத காரணத்தினால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறிய சலவை இயந்திரம் ஒன்றின் மூலமே வைத்தியசாலையின் சலவைத் தேவைகள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பூரணப்படுத்தப்பட்டு வந்த நிலையில் வைத்தியசாலை நிருவாகத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
இன் நன்கொடை சலவை இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் தூய்மைப்படுத்தல் மற்றும் கிருமியழித்தல் செயற்பாடுகளுக்கு பாரிய பக்கபலமாக இருக்கக்கூடிய வகையில் மேற்படி அதி நவீன சலவை இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இம்மகத்தான நன்கொடையினை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கிய மார்க்கண்டு நேசராசா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வைத்தியசாலையின் அனைத்து பணியாளர்கள் மற்றும் பட்டிருப்பு தொகுதி வாழ் பொதுமக்கள் சார்பிலும் மனமாாந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
அத்துடன், இதனை பெற்றுத்தர பின்னின்று அரும்பணியாற்றிய மயக்க மருந்து நிபுணர் Dr.பாஸ்கரன் , முதியோர் மருத்துவ நிபுணர் Dr.காந்தா நிரஞ்சன்,மற்றும் பொறியியலாளர் திரு. வசந்தன்,மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் ஆகியோருக்கும் உளமுவந்த நன்றியினையும், வாழ்த்தினையும் தெரிவித்து கொண்டார்கள்.






Porativupattu news