நாவலர் அதிபர் கணேசுக்கு பிரியா விடை
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்திலுள்ள புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலய அதிபர் கந்தையா கணேஷ் நேற்று ஓய்வு ஓய்வு பெற்றதை முன்னிட்டு நேற்று பாடசாலையில் பிரியாவிடை வைபவம் நடத்தப்பட்டது.
பாடசாலை சமூகம் நடத்திய பிரியா விடை வைபவத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை சமூகம் சார்பாக ஒன்பது வருடகாலம் அங்கு பணியாற்றிய ஓய்வு பெறும் அதிபரை சம்மாந்துறை பிரதேச சபை உபதவிசாளர் வெள்ளையன் வினோகாந்த் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
