யானை மேலமர்ந்து தரவை சித்தி விநாயகர் கல்முனை மாநகரில் வலம் வந்தார்!
கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025
கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 01.03.2025 கொடியேற்றத்துடன் ஆரம்மாகியது நேற்று 11.03.2025 செவ்வாய்க்கிழமை யானைகள் சகிதம் முத்துச்சப்ற பவனி இடம் பெற்றது. சித்தி விநாயகப்பெருமான் யானைகள் புடை சூழ கல்முனை மாநகரில் வலம் வந்தார். பாரம்பரிய நடனங்களுடன் இடம் பெற்ற ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபற்றயிருந்தனர்.
கல்முனை மாநகரின் தெற்கு எல்லையில் உள்ள ஆலயத்தில் இருந்து பாண்டிருப்பு வரை இம் முத்துச் சப்பர பவனி இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. T.J.அதிசயராஜ் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
இன்று 12.03.2025 புதன் கிழமை தீர்தோற்சவத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.














