சிவராத்திரி தினத்தில் கணித ஒலிம்பியாட் போட்டியா – கல்முனை வலயக்கல்வி பணிமனை திகதியை மாற்ற வேண்டுமென பெற்றோர் கோரிக்கை!
எதிர்வரும் 26 ஆம் திகதி இந்துக்களின் புனித விரதநாளான சிவராத்திரி தினமாகும். குறித்த தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு 26,27 திகதிகளில் விடுமுறை கிழக்கு மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்து சிவராத்திரி தினம் விரதம் அனுஷ்ட்டித்து இரவு கண்விழித்து மறுநாள் அதிகாலை விசேஷட பூசைகளும் இடம் பெறும். இவ்வாறுள்ள போது 26 ஆம் திகதி கல்முனை வலயக்கல்வி பணிமனை ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளமையானது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தினத்தில் மாணவர்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதோடு சிவராத்திரி கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதும் வழமை எனவே குறித்த போட்டியை வேறு ஒரு தினத்தில் நடத்துவதற்கு கல்முனை வலயக்கல்வி பணிமனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது
