ஆட்டை கடித்த நாய்க்கு தூக்கு தட்டனை வழங்கிய பெண் கைது.
ஆட்டை கடித்த நாய்க்கு தூக்கு தட்டனை வழங்கிய பெண் கைது.
ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட்டு கொன்ற வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் இன்று (27/01/2025)கைது செய்யப்பட்டுள்ளார்.
நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானதுடன், பலரின் கண்டனத்தையும் பெற்றது.
இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1907 ஆம் ஆண்டு இலக்கம் 13 ஆம் இலக்க விலங்குகளுக்கு வன்கொடுமை செய்வதைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
