நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (29.07.2026), தீர்த்தோற்சவத் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், ஆலயத்திலிருந்து பாண்டிருப்பு கடற்கரை நோக்கி உற்சவ மூர்த்தி வீதி உலா வந்து, கடல் அலையில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், நற்பிட்டிமுனை வேலன் தொண்டர் படையினர் சார்பில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடங்கிய தாகசாந்தி சேவை அன்புடன் வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் முன்னெடுக்கப்பட்ட இச்சேவை, அனைவரின் பாராட்டையும் பெற்றதுடன், திருவிழாவின் சிறப்பை மேலும் உயர்த்தியதாக அமைந்தது.





