என.சௌவியதாசன்
வீதி விபத்துக்கள் வேண்டுமென்று திட்டமிட்டு நடப்பது ஒன்றல்ல. காலம், நேரம், சூழ்நிலைகள் இந்த வீதி விபத்துக்களை தற்செயலாக ஏற்படுவதுண்டு. ஆனாலும் சில வீதி விபத்துக்கள். எமது செயற்பாடுகளினால். ஏற்படுத்தப்படுகின்றது. இன்றைய தினம்(16 – 07 – 2026) மருதமுனை பிரதான வீதியிலே இடம்பெற்ற. வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகி உள்ளார்.


இவரது விபத்து தொடர்பான CCTV காணொளியை உற்று நோக்கும் போது. அவர் தமது கடமையின் நிமித்தம் வீதியினால் செல்லும்போது. பிரதான வீதியிலேயே ஒருவர் நீரை. ஊற்றிக்கொண்டு நிற்கின்றார். அந்த நீரை ஊற்றும் போது அந்த விபத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.


எனவே இந்த விபத்து நடப்பதற்கான ஒரு முக்கிய காரணமாக அந்த சம்பவம். காட்டுகிறது. பிரதான வீதியை ஆண்டியதாக கடை வைத்து வியாபாரம் செய்வோர். தமது கடையோடு அண்டியதாக. நீரை ஊற்றுவதை விடுத்து பிரதான வீதிக்கு சென்று நீரை ஊற்ற வேண்டியதன் அவசியம் என்ன?. அதுவும் காலை வேளை. பல வீதி விபத்து சம்பவங்கள் இவ்வாறான பொறுப்பில்லாமல் செயல்படும் சில மனிதர்களாலே. நடைபெறுகிறது என்பதை. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


நடைபாதையில் வியாபாரப்பொருட்களை வைத்து வியாபாரம் செய்தல் கடைக்குள் உள்ள பொருட்களை கடையின் மு;னனாள் உள்ள நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்தல் இதனால் பாதசாரிகள் வீதி ஓரம் நடந்து பாயணிக்கவேண்டி ஏற்படுகின்றது. பொறுப்பில்லாமல் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்திவைத்தல் மேலே குறிப்பிட்டதுபோன்று நெருசலான நேரத்தில் வீதியில் கடைக்கு முன்பாக நீர் ஊற்றும் போது விபத்துக்குள்ளான இளம் குடும்பஸ்த்தர் வீதியின் பயணித்தபோது இந்த துயர சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஆகவே ஒவ்வொரு மனித உயிரும் பெறுமதியானது அனைவரும் சமூகப்பொறுப்புடனும் மனிதாபிமானத்துடனும் சிந்தித்து செயற்படுவோம்.


இவ்வாறான வீதி விபத்துக்கள் வாகன நெருசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதும் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்

எனவே. பிரதான வீதிகளில் பயணிப்போருக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியது யார் பொறுப்பு.?

………………………………………………………………………….

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்டியதாக இன்று(16) காலை வேளையில் இடம் பெற்றவிபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

வாழைச்சேனை இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்தில் கல்முனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவரே விபத்தில் உயிரிழந்திருந்தார்.

அவர்.மட்டக்களப்பு நொச்சி முனையை சேர்ந்தவரென்றும் பாண்டிருப்பில் திருமணம் செய்து வசிப்பவர் என்றும் கூறப்படுவதோடு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வேலைசெய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.உயிரிழந்தவர் தியாகராஜா ஜெயகிருஸ்ணன்