கோப்பாய் அரசினர்ஆசிரியர் பயிற்சி கலாசாலையில்
புதன்கிழமை 08.07.2026 இடம்பெற்ற ஒன்றுகூடல் மரபுத் தமிழ் இலக்கியங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வாக இடம்பெற்றது.
இக் கலாசாலையின் பிரதி அதிபர் கணபதிப்பிள்ளை செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை இளங்கோ கழக அமைப்பாளரும் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆசிரியருமாகிய பரா. ரதீஸ் அதிதியாகக் கலந்து கொண்டு இலங்கியம் காட்டிய மானிட அளவு கோல் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந் நிகழ்வுகளை இரண்டாம் வருட விசேட கல்விநெறி ஆசிரிய மாணவன் தங்கராசா தர்சன் முன்னிலைப்படுத்தினார்.
தமிழின் பெருவெளி என்னும் காணொளியினை ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜனால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இலக்கிய வழியில் அறம் பற்றிய விசேட உரையினை ஆரம்பக்கல்விநெறி ஆசிரிய மாணவி ஜெயராணி தினேஸ் ஆற்றினார்.
அதிதி அறிமுக உரையினை தமிழ்ப்பாடநெறி விரிவுரையாளர் வேல் நந்தகுமார் ஆற்றினார்.
பிரதிஅதிபர் க.செந்தில்குமரன் நிறைவுரை ஆற்றினார்
அதிதி பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.







