🚘

இலங்கை மத்திய வங்கி (CBSL) மோட்டார் வாகனங்களுக்கான கடன் மற்றும் லீசிங் வழங்குதலில் புதிய Loan-to-Value (LTV) வரம்புகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2026 மே 25 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு, அதன் சந்தை மதிப்பின் அதிகபட்சம் 60% வரை மட்டுமே கடன் அல்லது லீசிங் வசதி பெற முடியும்.

அதேவேளை, புதிய அல்லது ஒரு வருடத்திற்குக் குறைவாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வாகன வகை அடிப்படையில் தனித்தனி வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் (லொறி, Single Cab, Transport Vehicles உள்ளிட்டவை) தொடர்பில் அதிகபட்ச LTV 60% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான புதிய வாகனங்கள் (Car, SUV, Van, Three Wheeler, Motorcycle போன்றவை) தொடர்பில் 40% வரை மட்டுமே Loan அல்லது Lease பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீதமுள்ள 60% தொகையை வாங்குபவர்கள் முன்பணமாக செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் காரணமாக Brand New வாகனங்களை வாங்குவது சாதாரண மக்களுக்கு சிரமமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகமான Down Payment தேவைப்படுதல், Leasing மற்றும் Vehicle Loan அனுமதிகள் குறையுதல், Vehicle Sales மற்றும் Import சந்தையில் பாதிப்பு ஏற்படுதல் போன்ற விளைவுகளும் உருவாகலாம் என பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேபோல், Car Prices மற்றும் Resale Market-இலும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இந்த விதிமுறைகள் அனைத்து Licensed Commercial Banks, Licensed Specialised Banks, Finance Companies மற்றும் Leasing Establishments ஆகியவற்றிற்கும் பொருந்தும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், 2026 மே 25க்கு முன்னர் திறக்கப்பட்ட Letter of Credit (LC) அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தும் இன்னும் Finance பெறாத வாகனங்களுக்கு இடைக்கால சலுகை விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.