கத்தாரில் வாழும் தமிழர்களின் உற்சாக பங்கேற்புடன், தமிழக வெற்றிக் கழகம் – கத்தார் (TVK QATAR) ஏற்பாடு செய்த “UYARAM – 2026 கல்வி விருது விழா” சிறப்பாக நடைபெற்றது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தமிழ் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டும் நோக்கில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
அதேவேளை, “தளபதி வெற்றி கொண்டாட்டம்” எனும் கலைநிகழ்ச்சியும் விமரிசையாக இடம்பெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியையும், தளபதி விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதையும் கொண்டாடும் வகையில், கத்தாரிலுள்ள Atrium Venue அரங்கில் இந்நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் சகோதரியான திருமதி பல்லவி விநோத் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
மேலும், TVK QATAR ஒருங்கிணைப்பாளர் திரு. சதீஷ் அவர்களின் தலைமையிலும் ஒருங்கிணைப்பிலும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
700-க்கும் மேற்பட்ட TVK உறுப்பினர்கள், தமிழ் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கத்தாரில் வாழும் தமிழர்களின் ஒற்றுமையையும், தளபதி விஜய் மீதான அன்பையும் பிரதிபலிக்கும் நிகழ்வாக இது அமைந்தது.





