அகில இலங்கை கவிதைப் போட்டியில் கந்தசாமி அபிலாஷ் முதலிடம்.

(கலைஞர்.ஏ.ஓ.அனல்)

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கொழும்பு கம்பன் விழா 2026, அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த தேசிய மட்ட கவிதைப் போட்டியில் திறந்த பிரிவில் 1ம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் கந்தசாமி அபிலாஷ் பெற்றுக் கொண்டார். இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற மாபெரும் விழாவில் 1ம் இடத்தினை பெற்றமைக்காக தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் திருவாசக புத்தகத் தொகுப்பு என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

நிகழ்வானது ஏப்ரல் 30 தொடக்கம் மே 3ம் திகதி வரை கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்தும் குறிப்பாக இந்தியாவில் இருந்து பிரபல மேடைப்பேச்சாளர்கள், மேதைகள், இலக்கியவாதிகள், தமிழ்த் துறை பேராசியர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.