( வி.ரி.சகாதேவராஜா)

 வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பணி நயப்பு விழா ஆலயத் தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலய இருப்பு மற்றும் கட்டுமான பணிகள்,

சமய ஆன்மீக வளர்ச்சிக்கும், பாரம்பரிய கலை கலாச்சார ஊடக சேவை

மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்த எழுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

 ஆலய அலங்கார உற்சவத்தை சிறப்பாக செய்த சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள்- மீனாட்சி அலங்கார பூஷணம், சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள்- மீனாட்சி துரந்தரர்,சுந்தரேஸ்வரர் ஆலயத்தை நிருமாணித்துத்தந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம்- சிவபக்த சிகாமணி 

,ஆலய பணிகளில் முழுமையாக அர்ப்பணித்த  கே.கணேசன்-இறைத்தொண்டர்

 ,வி.ரி.சகாதேவராஜா- மதியுரைச்செம்மல்

,திருமதி எல்.ரிஷாந்தினி- இறை ஊடக ஜோதி, கே.காந்தரூபன்- இறைதாசர் ஆகியோர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில்,  விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.