( வி.ரி. சகாதேவராஜா)

 கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று 05 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகா சங்காபிஷேக கிரியைகளை நடாத்தினார்கள். 

ஆலய தர்மகர்த்தாக்களான இரா.திருநாவுக்கரசு கே.ஜெகமோகன் மற்றும் மா.சிதம்பரநாதன் எம்.ரவீந்திரன் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.