2025 ஆம் ஆண்டில் சைவத் தமிழ் மன்றத்தால் நடாத்தப்பட்ட இளஞ்சைவ பண்டிதர் மற்றும் சைவபண்டிதர் பரீட்சைகளுக்கு தோற்றி சித்தியடைந்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா – 2026 எதிர்வரும் 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு சைவத் தமிழ் மன்றத்தின் தலைவர் சைவப்புலவர், சைவபண்டிதர் பேராசிரியர் தி. சதானந்தம் தலைமையில் நடைபெறும். சைவத்தையும் தமிழையும் நேசிக்கும் அனைத்து உறவுகளையும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றார்கள்.
சைவத் தமிழ் மன்றம், மட்டக்களப்பு.
