2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மும்முனைப் போட்டி உருவாகிய நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக (TVK) முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக, சுமார் 30% வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

 மும்முனைப் போட்டி

இதன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு பெரிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆனால், தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் தற்போது 108 இடங்கள் மட்டுமே இருப்பதால் “தொங்கு சட்டசபை” சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஆட்சியை அமைக்க தவெகக்கு குறைந்தது 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.

இதனால், எந்தக் கட்சியிடம் ஆதரவு கோரப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா? அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் ஆதரவு தருமா? காங்கிரஸ் சில தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், அது தவெகவுக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

tamilwin