பாறுக் ஷிஹான்
இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது. அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம் ஆராயப்படும் போது இடம் இல்லை என்ற சொல் அதிகம் எம்மிடையே உச்சரிக்கப்படும் சொற்பிரயோகம் ஆகும்.தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கட்டட எச்சம் கூட இவ்வாறான நிலைமையினை கடந்த 25 வருடங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆயுள்வேத மத்திய மருந்தகம் மற்றும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடந்த 2004 ஆண்டு சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் இதுவாகும்.தற்போது இக்கட்டடத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதுடன் பாதுகாப்பற்ற இடமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தவிர குறித்த கட்டடத்தில் இரவு வேளையில் போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருவதற்கான அடையாளம் தென்படுவதுடன் அருகில் பாடசாலை ஒன்றிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.எனவே குறித்த கட்டடம் அமைந்துள்ள பகுதியை சந்தையாக மாற்றி தந்துதவுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் குறித்த இடத்தை உரிய தரப்பினர் துப்பரவு செய்து அப்பகுதியில் இடம்பெற்று வரும் சமூக சீர்கேடுகளை நிறுத்த முன்வர வேண்டும் என மக்கன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் விச ஜந்துக்களின் நடமாட்டத்தினால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.




