உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் மட்/பெரியகல்லாறு அருளானந்தர் வித்யால பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.


சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால். மட்/ பெரியகல்லாறு அருளானந்தர் வித்யாலய பாடசாலை சமூகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க. பாடசாலையில். ஆசிரியர்கள் பயன்படுத்தும் விதமான. கதிரைகள் இன்றைய தினம்(07) பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

ஓய்வு பெற்ற அதிபர் கா. சந்திரலிங்கம். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மதிசீலன். ஆகியோருடன் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு என் சௌவிய தாசன் ஆகியோர் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்.

இதே பாடசாலைக்கு எலவே பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.