( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
எதிர்வரும் 09.04.2026 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கர்மாரம்பம் நடைபெறவுள்ளது.
மறுநாள் வெள்ளிக்கிழமை 10.04.2026 மற்றும் 11.04.2026 சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 3 மணி வரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும்.
மகா கும்பாபிஷேக நிகழ்வு 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு இறை அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
