நம்மூரில் மதத்தின் பெயரால் நடந்த கொடூரம்!
இதுவரை திரைப்படங்களில் பார்த்தும், இந்திய செய்திகளின் வழியாக கேட்டும் அறிந்த சம்பவங்கள், நம் நாட்டில், நம்மூரில் நேரில் நடக்கும்போது மனம் மிகவும் பதறுகிறது.
மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கிராமத்தில் உள்ள உச்சிமா காளியம்மன் ஆலயத்தில் இரண்டு இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொ*லைவெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின் அடிப்படையில், குறித்த இளைஞர்கள் தெய்வம் ஆடும் சடங்கின்போது அதை மந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்த முயன்றதாகவும், அதனால் ஆலய நிர்வாகத்துடன் முரண்பாடு ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் அறியப்படுகிறது.
எதுவாக இருந்தாலும், ஒரு ஆலய வளாகத்திலேயே இவ்வாறு கொடூரமான தாக்குதல் நடப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளிகளை பார்க்கும்போது, தாக்குதல் நடத்தியவர்கள் சுயநினைவின்றி, ஒருவித விசித்திரமான போதை மனநிலையிலேயே இருந்தது போல தோன்றுகிறது. அதைத்தாண்டி அம்மனின் சந்நிதானத்தில் அந்த ஆலய பரிபாலன சபையை நடாத்தும் இந்த கொடூரர்களின் வார்த்தை பிரயோகங்களை பார்க்கும் போது இவனுகள் யாருமே அம்மனின் பக்தன்களாக இருப்பதற்கு தகுதியற்ற காட்டுமிராண்டிகள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
அம்மனின் சந்நிதியில் இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள், பக்தர்கள் அல்ல, மனிதநேயமே இழந்த காட்டுமிராண்டிகள் என நினைக்கத் தோன்றுகிறது.
தற்போது படுகாயமடைந்த இருவரும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
✍️ சஜன் செல்லையா

